திங்கள், 23 நவம்பர், 2015

விடுகதை வினா விடைகள் - தொகுப்பு 02

விடுகதைகள்


1. வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் – அது என்ன?
- [கனவு]
2. மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் - அது என்ன?
- [நத்தை]
3. மூன்றுகால் குள்ள அக்கா, பாரம் தாங்கி, நெருப்பை சுமந்து சோறு சமைப்பாள் – அவள் யார்?
- [அடுப்பு]
4. பட்டனைத் தட்டினால் சட்டென விரியும் - அது என்ன?
- [குடை]
5. நீரிலும், நிலத்திலும் வாழ்வான், பாறைக்குள்ளும் பதுங்கி வாழ்வான் – அவன் யார்?
- [தவளை]


6. கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் – அவன் யார்?
- [பூட்டு]
7. மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன் – அது என்ன?
- [மழை]
8. முற்றத்தில் நடக்கும் மூலையில் படுப்பான் – அவன் யார்?
- [துடைப்பம்]
9. முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான் – யார் அவன்?
– [கதவு]
10. மேல் பலகை, கீழ் பலகை நடுவில் நெளி பாம்பு – அது என்ன?
- [நாக்கு]


11. மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?
- [வேர்க்கடலை]
12. இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரமல்ல – அது என்ன?
- [மின்மினிப் பூச்சி]
13. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
- [பம்பரம்]
14. வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?
- [வாழைப்பழம்]
15. ஒட்டியிருக்கிறார்கள் எதிராளிகள், அவர்கள் ஒன்று சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கிறார்கள் – அது என்ன?
- [த்தரிக்கோல்]


16. ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்?
- [நிழல்]
17. உணவை கையில் எடுப்பான் ஆனால் உண்ண மாட்டான் – அவன் யார்?
- [அகப்பை]
18. அரங்கினில் ஆடாதவள், கிளைகளில் அரங்கேற்றம் நடத்துவாள் – அவள் யார்?
- [தென்றல்]
19. தொடப் பார்த்தேன் எட்டிச் சென்றது, பறந்து பார்த்தேன் விரிந்து சென்றது – அது என்ன?
- [வானம்]
20. உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே உற்சாக பானம் – அது என்ன?
- [தண்ணீர்]


21. கீறினால் சோறுதரும், நீர் ஊற்றினால் சேறு வரும் – அது என்ன?
- [நிலம்]
22. விரிந்த வயல் வெளியில் வதைத்த நெல் மணிகள் – அது என்ன?
- [நட்சத்திரம்]
23. மூலையில் முடங்கிக் கிடப்பான், மூலைமுடுக்கெல்லாம் சுத்தம் செய்வான் –அவன் யார்?
- [துடைப்பம்]
24. இனிப்புப் பொட்டலத்துக்கு இரண்டாயிரம் பேர் காவல் – அது என்ன?
- [தேன்கூடு]
25. கையில்லாமல் நீந்தி, கடல் கடப்பான் – அவன் யார்?
- [கப்பல்]


26. எண்ணத்தை விதைத்து, வண்ணமாய் அறுவடை செய்வது – அது என்ன?
- [ஓவியம்]
27. அவனுக்கு காவலுக்கு ஒரு வீடு, வாழ்வதற்கு ஒரு வீடு – அவன் யார்?
- [ஆமை]
28. ஆரவாரம் இல்லாமல் அணிவகுப்பு, ஓயாது அவர்கள் உழைப்பு – யார் அவர்கள்?
- [எறும்புக் கூட்டம்]
29. கோழிபோல் உருவம், குதிரைபோல் ஓட்டம் – அது என்ன?
- [நெருப்புக் கோழி]
30. உயரப் பறக்கும், ஆனால் ஊரைச் சுற்றிக் கொண்டு பறக்காது – அது என்ன?
- [கொடி]


31. கண்ணே இல்லாதவன், கண் இழந்தோருக்கு வழிகாட்டுவான் – அவன் யார்?
- [கைத்தடி]
32. உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் – அவன் யார்?
- [தண்டோரா]
33. கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்?
- [உளுத்தம் பருப்பு]
34. உருவம் இல்லாத ஒருவன், உலகெங்கும் உலவித் திரிவான் – அவன் யார்?
- [காற்று]

35. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?
- [பந்து]


36. நனைந்தாலும் நடுங்கமாட்டான் – அவன் யார்?
- [குடை]
37. அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான் – அவன் யார்?
- [புகை]
38. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் – அவன் யார்?
- [மோதிரம்]
39. எட்டுக்கால் ஊன்றி இடமும், வலமுமாக வருவான் – அவன் யார்?
- [நண்டு]
40. ஓடையில் நிற்கும் ஒற்றைக்காலனுக்கு ஒரே குறி உணவு – அவன் யார்?
- [கொக்கு]


41. ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம் - அது என்ன?
- [ஆலமரம்]
42. முரட்டு மனிதனுக்கு முப்பத்திரண்டு பேர் காவல் - அது என்ன?
- [நாக்கு]
43. நடந்தால் நடக்கும், நின்றால் நிற்கும் - அது என்ன?
- [நிழல்]
44. உயிரற்ற பறவை, ஊர் ஊராய் பறக்கும் - அது என்ன?
- [விமானம்]
45. விறகெரியத் துணையாகும், விளக்கெரியப் பகையாகும் - அது என்ன?
- [காற்று]


46. நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது - அது என்ன?
- [புகைப்படம்]
47. தலையில் வைக்க முடியாத பூ, சமையலுக்கு உதவும் பூ - அது என்ன?
- [வாழைப்பூ]
48. தோகைபோல உடம்புக் காரி, துப்புரவு தொழிலுக்கு கெட்டிக்காரி - அவள் யார்?
- [துடைப்பம்]
49. ஆயிரம் அறைகள் அரண்மனையில், ராணியின் ஆட்சி - அது என்ன?
- [தேன்கூடு]
50. நூல் நூற்கும் ராட்டை அல்ல, வலை பின்னும் மீன் பிடிக்க அல்ல - அது என்ன?
- [சிலந்திப் பூச்சி]


51. நோயின்றி நாளும் மெலிவாள், கோள் சொல்லி நாளும் கழிவாள் - அவள் யார்?
- [நாட்காட்டியின் தாள்]
52. மழைக்காலம் வந்தாலே மகராசி சங்கீதம் தான் - அவள் யார்?
- [தவளை]
53. அரைசாண் மனிதனுக்கு வயிறு நிறைய முட்டை - அவன் யார்?
- [வெண்டைக்காய்]
54. சிவப்பு பைக்குள் சில்லறைகள் - அது என்ன?
- [மிளகாய்]
55. உலகமெங்கும் சுற்றும் அவனை ஒருவரும் கண்டதில்லை - அவன் யார்?
- [காற்று]


56. அக்கா தங்கை உறவுண்டு, அருகருகே வீடு உண்டு. கிட்டக்கிட்ட வந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் - அவர்கள் யார்?
- [கண்கள்]
57. வந்தால் கொடுக்கும், வராவிட்டால் கெடுக்கும் - அது என்ன?
-[மழை]
58. வயிறு முட்ட சாப்பிட்டால்தான் நிமிர்ந்து நிற்பான் - அவன் யார்?
- [பலூன்]
59. உழைக்க உழைக்க உடலெல்லாம் தோன்றும் - அது என்ன?
- [வியர்வை]
60. வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி - அது என்ன?
- [விளக்குத் திரி]


61. பந்தலைச் சுற்றி பாம்பு தொங்குது - அது என்ன?
- [புடலங்காய்]
62. ஊளையிட்டுக் கொண்டே ஊரைச் சுமக்கும் - அது என்ன?
- [புகைவண்டி]
63. கடல் நீரில் மறைந்திருக்கும் கல் - அது என்ன கல்?
- [உப்புக்கல்]
64. நிறைவேறாத ஆசைகளை நித்திரையில் பெறலாம் - அது என்ன?
- [கனவு]
65. கையால் இழுத்தால் அசையும் நாக்கு, கணீரென்று அனைவரையும் அழைக்கும் - அது என்ன?
- [மணியோசை]


66. பூட்டு இல்லாத பெட்டியை திறக்கலாம், ஆனால் மீண்டும் பூட்ட முடியாது - அது என்ன?
- [தேங்காய்]
67. தேவை என்றால் வீசுவார்கள், தேலையில்லை என்றால் எடுத்து வைப்பார்கள் - அது என்ன?
- [நங்கூரம்]
68. ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் - அது என்ன?
- [கத்தரிக்கோல்]
69. எட்டித் தொட நினைத்தேன், இடறி விழுந்தேன், குதித்து தொட நினைத்தேன் குட்டிக் கரணம் போட்டேன் - அது என்ன?
- [வானம்]
70. பழகினால் மறக்காதவன், பயம் அறியாதவன் - அவன் யார்?
- [நாய்]


71. காலையில் உறவாடி வருவான், மாலையில் பறந்தோடிப் போவான் - அவன் யார்?
- [சூரியன்]
72. நித்திரையின் தூதுவன், நினையாமல் வருவான் - அவன் யார்?
- [கொட்டாவி]
73. உடல் இல்லாதவன் ஊரெல்லாம் பவனி வருவான் - அவன் யார்?
- [காற்று]
74. வெளியே வெள்ளி, உள்ளே தங்கம் - அது என்ன?
- [முட்டை]
75. பகலில் எரியா விளக்கு, இரவில் அணையா விளக்கு - அது என்ன?
- [நிலா]


76. தங்கை தீட்டிய ஓவியம் தரையில் தவழ்கிறது - அது என்ன?
- [கோலம்]
77. அனைவரையும் ஆட்டிப் படைக்கும், ஆதவன் வந்தால் ஓடிப்போகும் - அது என்ன?
- [குளிர்]
78. வாணலியில் விரியும் வட்ட வட்ட இலை - அது என்ன?
- [அப்பளம்]
79. உச்சியின் ஊடே சிக்கல் தீர்ப்பான், சிக்கிக் கொண்டால் பல்லை இழப்பான் - அவன் யார்?
- [சீப்பு]
80. கொடுக்கு இரண்டு இருந்தாலும், அவனுக்கு வாலில்தான் விஷம் - அவன் யார்?
- [தேள்]


81. உறையில் உறங்குவான், உயிரைப் பறிப்பான் - அது என்ன?
- [வாள்]
82. ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது - அவர்கள் யார்?
- [எறும்புக்கூட்டம்]
83. எரித்தால் சிவப்பு அணைந்தால் கறுப்பு - அது என்ன?
- [கரித்துண்டு]
84. கரித்துண்டு நான், கடினத்திற்கு நான், காண்போரைக் கவருவேன் - நான் யார்?
- [வைரம்]
85. இரண்டு பெண்கள், இரட்டைப் பிறவிகள் ஒருத்தி கீழே வந்தால் ஒருத்தி மேலே போவாள் - அவர்கள் யார்?
- [தராசுத் தட்டுகள்]


86. அடித்தால் வலிக்கும் கடித்தால் இனிக்கும் - அது என்ன?
- [கரும்பு]
87. பாறைமேல் இட்டவிதை பார்ப்பவர் வியக்க முளைத்த விதை - அந்த விதை?
- [பல்]
88. மண்ணிலே பிறந்து விண்ணிலே மறையுது - அது என்ன?
- [நிலா]
89. நீரிலே கொண்டாட்டம், நிலத்திலே திண்டாட்டம் - அது என்ன?
- [மீன்]
90. நிலத்திலே முறைக்காத செடி நிமிர்ந்மு நிற்காத செடி - அது என்ன?
- [தலைமுடி]


91. தொப்பை பயனுக்கு ஒரு வாசல் தோழனுக்கு இரண்டு வாசல் - அது என்ன?
- [சட்டை]
92. தச்சர் கொத்தனார் செய்யாத தேர் தானே கிளம்பும் சித்திர தேர் - அது என்ன?
- [புற்று]
93. சிவப்பு மொசைக் கொட்டை பகட்டும் பட்டு சட்டை அந்த சட்டை - அது என்ன?
- [பட்டுப்பூச்சி]
94. உணவை எடுப்பான், எல்லோருக்கும் கொடுப்பான், ஆனால் தான் மட்டும் உண்ணமாட்டான் - அவன் யார்?
- [அகப்பை]
95. உதைக்க தெரிந்தவனுக்கு நன்கு உழைக்கவும் தெரியும் - அவன் யார்?
- [கழுதை]


96. உமிபோல் பூ பூக்கும் சிமிழ்போல் காய் காய்க்கும் - அது என்ன?
- [நெல்லிக்காய்]
97. உணவு கொடுத்தால் வளருவான், நீர் கொடுத்தால் மாண்டு போவான் - அவன் யார்?
- [நெருப்பு]
98. உறங்காமல் தவிப்பவன், ஊருக்குள் வந்தால் பலரை பலி வாங்குவான் - அவன் யார்?
- [சுனாமி]
99. உயிரில்லாதவன் தினமும் ஓயாமல் ஓடுகிறான் - அவன் யார்?
- [கடிகாரம்]
100. கடலில் பிறந்தவன், அவன் இல்லாத வீடே இல்லை - அவன் யார்?
- [உப்பு]


101. மண்மீது குடையாவான், மழைக்கு துணையாவான் - அவன் யார்?
- [மரம்]
102. ஊருக்கெல்லாம் ஒரே ஆடை - அது என்ன?
- [வானம்]
103. கையுண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை - அவன் யார்?
- [சட்டைத்துணி]
104. அள்ள முடியும், கிள்ள முடியாது - அது எது?
- [தண்ணீர்]
105. ஒற்றை முத்துக்கு ஒரு பெட்டி, இரட்டை முத்துக்கும் ஒரே பெட்டி - அது என்ன?
- [வேர்க்கடலை]


106. மூன்று கொண்டை வைத்திருப்பாள் ஆனால் பெண் அல்ல - அது என்ன?
- [அடுப்பு விளிம்புகள்]
107. ஊரையே சுற்றுவான் ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் - அவன் யார்?
- [செருப்பு]
108. பத்து திங்கள் இருட்டறையில் இருந்தவன், விடுதலையானதும் அழுகிறான் - அவன் யார்?
- [பிறக்கும் குழந்தை]
109. தேவைப்படும்போது பையை நிரப்பலாம், ஆனால் தேவைக்கு மேலே பையை நிரப்ப முடியாது - அது என்ன?
- [வயிறு]
110. இரவிலே எழும் தீபம், பகலில் பார்க்க முடியாது - அது என்ன?
- [நிலவு]


111. உடைக்க முடியாத ஓட்டிற்குள் ஒளிந்திருப்பான் கள்ளன் - அவன் யார்?
- [ஆமை]
112. ஒருநாள் முழுமுகம் காட்டுவான், ஒருநாள் முகமே காட்ட மாட்டான் -அவன் யார்?
- [நிலவு]
113. வீடு கட்டத் தேவை சாரம். வீட்டு ஒளிக்குத் தேவை இன்னொரு சாரம் - அது என்ன சாரம்?
- [மின்சாரம்]
114. உடல் முழுதும் நூறுகட்டு, உச்சி முடிக்கு கட்டே இல்லை - அது என்ன?
- [தென்னை மரம்]
115. நீரில் மிதக்கும் பூ, இரவில் பூக்கும், பகலில் உறங்கும் - அது என்ன பூ?
- [அல்லிப்பூ]


116. போதையின்றி தள்ளாடினாலும், புறப்படும் ஊர் போய் சேருவான் - அது என்ன?
- [கப்பல்]
117. ஒரே நேரத்தில் மூடித் திறக்கும் கதவுகள், ஓராயிரம் முறை இயங்கினாலும் ஓசை வராத கதவுகள் - அது என்ன?
- [இமைகள்]
118. ஆயிரம்பேர் திரண்டாலும், அணு அளவு கூட தூசி கிளம்பாது - அது என்ன?
- [எறும்புக்கூட்டம்]
119. குளிருக்கு கல்லாவான், அனலுக்கு தண்ணீராவான் - அது என்ன?
- [பனிக்கட்டி]
120. கிட்ட இருக்கும் பட்டணம் எட்டி பார்க்க முடியாது - அது என்ன?
- [நமது முதுகு]


121. பெட்டியை உடைத்தால் முத்துக்கள் - அது என்ன?
- [மாதுளம் பழம்]
122. காற்றிலே பறந்து போகும் கண்ணாடிக் கூண்டு, கைபட்டால் உடைந்து போகும் கண்ணாடிக் கூண்டு - அது என்ன?
- [சோப்புக் குமிழ்]
123. பள்ளிக்குப் போனாலும் பாடம் படிக்க மாட்டான், ஆனால் சரியாக கண்ணக்குச் சொல்வான் - அவன் யார்?
- [கால்குலேட்டர்]
124. குடையுடன் சந்தைக்கு வருபவரை, குழம்புக்காக எல்லோரும் விரும்புவார்கள் - அது என்ன?
-[கத்தரிக்காய்]
125. மழை நேரத்தில் வெட்ட வெளியில் மின்னும் விளக்கு - அது என்ன?
- [மின்னல்]


126. சரியென்றாலும் அழிப்பான், தவறென்றாலும் அழிப்பான் - அவன் யார்?
-[ரப்பர்]
127. ஒலி கொடுத்து அழைப்பான், உரையாடலில் திளைப்பான் - அவன் யார்?
-[டெலிபோன்]
128. ஆட்டிவிட்டால் ஆடுவான், ஆட்டாவிட்டால் தொங்குவான் - அவன் யார்?
- [ஊஞ்சல்]
129. மண்ணெடித்து கூடு கட்டும், மரம் அரித்து உயிர் வாழும் - அது என்ன?
- [கரையான்]
130. சிதறிக் கிடக்குது புள்ளிகள் சித்திரம் வரைய ஆளில்லை - யார் அது?
-[நட்சத்திரக்கூட்டம்]


131. விருந்துக்கு அழைத்து விதியை முடிப்பவன் - அவன் யார்?
- [எலிப்பொறி]
132. குதி குதித்தான் பல் இளித்தான் - அவன் யார்?
- [சோளப்பொறி]
நன்றி : tamil

1 கருத்து:

  1. ஆயிரம் காய் காய்க்கும் அனால் ஒன்று கூட கனியாகாது. அஃது என்ன?

    பதிலளிநீக்கு