திங்கள், 23 நவம்பர், 2015

விடுகதை - வாய்மொழி இலக்கியம் தொகுப்பு 01


NoவிடுகதைNoவிடை
1முத்துக்கள் இருக்கும். ஆனால் யாருமே பிரமிக்க மாட்டார்கள். அது என்ன?1வெண்டைக்காய்
2வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்?2நிழல்
3ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?3கடிதம்
4பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?4மிளகாய்
5இமைக்காமல் இருந்தால் எட்டிப் பார்ப்பான். அவன் யார்?5கண்ணீர்
6கண்ணுக்குத் தெரியாதவன்; உயிருக்கு உகந்தவன். அவன் யார்?6காற்று
7தலையைச் சீவினால் தாளிலே மேய்வான். அவன் யார்?7பென்சில்
8சுற்றுவது தெரியாது; ஆனால் சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார்?8பூமி
9வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?9முட்டை
10கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான். அவன் யார்?10பாம்பு
11அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?11கடல்நீர்
12முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம். அது என்ன?12பலாப்பழம்
13உரசினால் உயிரை விடுவான். அவன் யார்?13தீக்குச்சி
14அள்ளும் போது சலசலக்கும் கிள்ளும் போது கண் கலங்கும் அது என்ன?14வெங்காயம்
15வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார்?15தபாற் பெட்டி,
16முக்கண்ணன் சந்தைக்குப் போகின்றான் அவன் யார்?16தேங்காய்,
17மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம் அவன் யார்?17சிலந்தி,
18தொடலாம் ஆனால் பிடிக்க முடியாது அது என்ன?18தண்ணீர்,
19உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?19அகப்பை,
20வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம் அவன் யார்?20மழை மேகம்,
21ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?21முட்டை.
22காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்?22தென்னைமரம்
23எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார்?23நிலா
24நடந்தவன் நின்றான். கத்தியை எடுத்து தலையைச் சீவினேன். மறுபடி நடந்தான். அவன் யார்?24பென்சில்
25வால் நீண்ட குருவிக்கு வாயுண்டு. வயிறில்லை. அது என்ன?25அகப்பை
26அம்மா போடும் வட்டம்,பளபளக்கும் வட்டம்,சுவையைக் கூட்டும் வட்டம். சுட்டுத் தின்ன இஷ்டம். அது என்ன?26அப்பளம்
27வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன?27தீக்குச்சி
28ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?28கண்ணீர்
29சலசலவென சத்தம் போடுவான், சமயத்தில் தாகம் தீர்ப்பான். அவன் யார்?29அருவி
30தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?30தொலைபேசி
31வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை. அது என்ன?31செருப்பு
32ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?32கடல்
33சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?33கண்
34மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?34அணில்
35அடிக்காத பிள்ளை அலறித் துடிக்கும், அது என்ன?35சங்கு
36அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து, அது என்ன?36கோலம்
37வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?37பூட்டும் சாவியும்
38எத்தனை தரம் சுற்றினாலும் தலை சுற்றாது, அது என்ன?38மின்விசிறி
39உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?39பாய்
40உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன், அவன் யார்?40எறும்பு
41மழை காலத்தில் குடை பிடிப்பான், அவன் யார்?41காளான்
42வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார். அவர் யார்?42பாம்பு
43யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?43கண் இமை
44வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?44ஆறு அல்லது அருவி
45அடிக்காமல்,திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?45வெங்காயம்
46வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?46நெருப்பு
47வெள்ளை ராஜாவுக்கு கறுப்பு உடை அது என்ன?47உழுந்து
48தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?48முதுகு
49மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?49சிலந்தி வலை
50முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?50மின்சாரம்
51நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?51சிலந்திவலை
52நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார்?52மணிக்கூடு
53காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?53நிழல் அல்லது விம்பம்
54பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?54சீப்பு
55வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?55முட்டை
56ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?56உள்ளங்கையும் விரல்களும்
57தொப்பொன்று விழுந்தான் தொப்பி கழன்றான் அவன் யார்?57பனம்பழம்
58சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?58வாழைப்பழம்
59பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?59வத்தல் மிளகாய்
60அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன?60சங்கு
61தட்டச் சீறும் அது என்ன?61தீக்குச்சி
62உரிச்ச புறா சந்தைக்குப் போகுது அது என்ன?62தேங்காய்
63நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?63தையல் ஊசியும் நூலும்
64உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?64எறும்பு
65கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?65நிழல்
66முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?66நத்தை
67ஓயாது இரையும் இயந்திரம் அல்ல.உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?67கடல் அலை
68வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?68வழுக்கை / பொக்கை
69தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?69பென்சில்
70கல்லில் காய்க்கும்பூ தண்ணீரில் மலரும்பூ, அது என்ன பூ?70சுண்ணாம்பு
71காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?71பலூன்
72பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?72கிளி
73அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?73அம்மி குளவி
74கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?74பூசனிக்கொடி
75கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?75கரும்பு
76பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?76தலைமுடி
77வாலால் நீர் குடிக்கும்,வாயால் பூச்சொரியும் அது என்ன?77விளக்கு
78நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?78நாய்
79உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?79இளநீர்
80தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?80அன்னாசிப்பழம்
81அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான், அவன் யார்?81பந்து
82காகிதம் கண்டால் கண்ணீர் விடும்,முக்காடு போட்டால் மூலையில் அமரும் அது என்ன?82பேனா
83ஓயாது இரையும் எந்திரமல்ல, உருண்டோடி வரும் பந்துமல்ல, அது என்ன?83கடல் அலை
84தலையை வெட்ட வெட்ட கறுப்பு நாக்கை நீட்டுவது அது என்ன?84பென்சில்
85வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?85சிரிப்பு
86முயல் புகாத காடு எது?86முக்காடு
87வீட்டுக்கு வந்த தொந்தியப்பன் தினமும் கரைகிறான். அவன் யார்?87நாட்காட்டி
88நூறு கிளிக்கு ஒரே வாய். அது என்ன?88வாழைப்பூ
89ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன?89தோடு
90பெட்டியைத் திறந்தால் பூட்ட முடியாது. அது என்ன?90தேங்காய்
91எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?91நண்டு
92படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?92பட்டாசு
93சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?93கொசு / நுளம்பு
94கந்தல் துணிக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?94சோளப்பொத்தி
95மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?95அன்னாசிப்பழம்
96ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?96தேங்காய்
97நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?97நத்தை
98ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?98கண்ணீர்
99கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?99மெழுகுத்திரிவத்தி
100தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?100நுங்கு
101ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?101பற்கள்
102ஆழக் குழி தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை102தென்னை மரம்
103அம்மா சேலையை மடிக்க முடியாது, அப்பா காசை எண்ண முடியாது.103வானம் நட்சத்திரம்
104வெள்ளிக் கிண்ணத்தில் தங்க காசு104முட்டை
105குண்டுச்சட்டியில குதிரை ஓட்டறான்.105ஆட்டுக்கல்
106வெள்ளி ஓடையில கருப்பு மீனு துள்ளி விளையாடுது.106கண்
107டாக்டர் வந்தாரு, ஊசி போட்டாரு, காசு வாங்காமல் போனாரு.107கொசு
108மழையில் பூக்கும் பூ108குடை
109ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான்.109செருப்பு
110ஒரு குகை, 32 வீரர்கள் , ஒரு நாகம்110வாய்
111வெள்ளிக் கிணத்துல தண்ணி111தேங்காய்
112முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன?112நாக்கு
113அழுவேன்,சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்?113முகம் பார்க்கும் கண்ணாடி
114கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடிவது என்ன?114உப்பு
115வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை அவன் யார்?115போட்டோ
116விரல் இல்லாமலே ஒரு கை. அது என்ன?116உலக்கை
117குரல் இல்லாதவன் கூப்பிடுகிறான் அவன் யார்?117தொலைபேசி
118அம்மா சப்பை, மகள் உருண்டை அது என்ன?118அம்மி, குழவி
119தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?119நெல்
120நனைந்தாலும் நடுங்க மாட்டான் அவன் யார்?120குடை
121பார்க்க முடியும் நூல்,தைக்க முடியா நூல், அது என்ன நூல்?121சிலந்தி வலை
122கண்ணும் காதும் ஒன்றாவான்; கழுத்தும் தலையும் ஒன்றாவான். அவன் யார்?122பாம்பு
123நான்கு கால்கள் உள்ளவன்; இரண்டு கைகள் உள்ளவன். உட்கார்ந்து கொண்டிருப்பான்; உட்கார இடம் கொடுப்பான். அவன் யார்?123நாற்காலி
124தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?124உப்பு
125பஞ்சு மெத்தை மஞ்சம் போட்டு வச்சிருக்கு; படுத்துத் தூங்கத்தான் ஆளில்லாமல் இருக்கு. அது என்ன?125மேகம்
126தண்ணீர் கடல் மேலே தாம்பாளத் தட்டு மிதக்குது. அது என்ன?126நிலா
127மரத்தின் மேலே தொங்குது மலைப் பாம்பல்ல. அது என்ன?127விழுது
128நீரில் நனைத்தாலும் நீளம், அகலம் குறையாது. அது என்ன?128துணி
129முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது; படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை. அது என்ன?129நட்சத்திரங்கள்
130பழுத்திருக்கும் பழமாம்; யாரும் பறிக்காத பழமாம். அது என்ன?130நிலா
131அரசன் ஆளாத கோட்டைக்கு பகல் காவல்காரன் ஒருவன்; இரவுக் காவல்காரன் ஒருவன். அவர்கள் யார்?131சூரியன், சந்திரன்.
132பேச்சுக் கேட்குது பேசுபவர் தெரியவில்லை. அது என்ன?132வானொலிப் பெட்டி
133உடைப்பு இல்லா ஏரியில் உள்ள தண்ணீர் ஒழுகுது. அது என்ன?133மழை
134வெள்ளத்தில் போகாது; வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது; கொடுத்தாலும் குறையாது. அது என்ன?134கல்வி
135குடிக்காத தண்ணீர் குடத்துக்குள்ளே கிடக்குது. அது என்ன?135தேங்காய்
136நான் பார்த்தால் அவன் பார்ப்பான்; நான் சிரித்தால் அவன் சிரிப்பான். அவன் யார்?136முகம் பார்க்கும் கண்ணாடி
137ஓலை வீட்டில் குடியிருப்பாள்; உண்ணாமல் தவமிருப்பாள். வாடகையும் தரமாட்டாள்; வீட்டைக் காலியும் செய்ய மாட்டாள். அவள் யார்?137ஓலைச் சுவடியில் செய்யுள்
138வாயில்லாத குருவி வண்ண இசை பாடுது. அது என்ன?138வீணை
139பொன்னு விளையும் பூமி. அது என்ன?139தங்கச்சுரங்கம்
140தட்டு நிறைய லட்டு; தாய் திண்ண முடியலே. அது என்ன?140முட்டை மேல் அடைகாக்கும் கோழி
141சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?141தீக்குச்சி
142தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?142தபால் தலை
143உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?143கடல் அலை
144காற்று வீசும் அழகான மரம் அது என்ன?144சாமரம்
145கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான்.145வெங்காயம்
146எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்?146செல்பேசி
147உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?147அகப்பை
148ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?148முட்டை.
149ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?149கடிதம்
150வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?150கல்வி
151பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?151முருங்கைமரம்
152தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?152உப்பு
153குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?153கத்தரிக்காய்
154காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்?154புல்லாங்குழல்.
155ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன?155ரத்தம்
156தனித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை. அது என்ன?156உப்பு
157வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?157கத்தரிக்கோல்
158ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?158துடைப்பம்/தும்புத்தடி
159ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?159ஊதுபத்தி
160மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?160பஞ்சு
161தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?161எலுமிச்சம்பழம் தேசிக்காய்
162எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?162விக்கல்
163அகத்தில் அகம் சிறந்த அகம். அது என்ன அகம் ?163புத்தகம்
164வானத்துக்கும் பூமிக்கும் ஒரே கம்பி அது என்ன ?164மழை
165குட்டைப் பெண்ணுக்குப் பட்டுப் புடவை. அது என்ன ?165வெங்காயம்
166ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ?166தேன்கூடு
167சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன?167காய்ந்த சிவப்பு மிளகாய்
168ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன?168தேன்கூடு
169பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?169தவளை
170எங்க வீட்டு கிணத்துல வெள்ளி கிண்ணம், மிதக்குது, அது என்ன?170நிலா
171ஆயிரம் தச்சர் கூடி அமைந்த மண்டபம், ஒருவர் கண்பட்டு உடைந்தது, அது என்ன?171தேன் கூடு
172கருப்பு சட்டை காரன் காவலுக்கு கெட்டிகாரன் அது என்ன?172பூட்டு
173கெணத்த சுத்தி அகத்தி கீரை அது என்ன?173கண்
174இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது அது என்ன?174பட்டாசு
175இதை சமைக்கும் முன் வெளியெ இருப்பதை எறிந்துவிடுவோம், சமைத்து வெளி இருப்பதை சாப்பிட்டு உள் இருப்பதை எறிந்துவிடுவோம். அது என்ன?175பலாப்பழம், மக்கா சோளம்.
176செய்வதைச் செய்வான்; சொன்னதைச் செய்யான். அவன் யார்?176கண்ணாடி
177பட்டணத்தில் இருந்து இரண்டு சிறாய் கொண்டு வந்தேன்; ஒன்று எரியுது; இன்னொன்று புகையுது. அது என்ன?177கற்பூரம்,சாம்பிராணி
178உயிர் இல்லாத நீதிபதி ஒழுங்காக நியாயம் சொல்வார் அது என்ன?178தராசு
179படுத்துத் தூங்கினால் கண்முன் ஆடும்; அடுத்து விழித்தால் மறைந்தே ஓடும். அது என்ன?179கனவு
180கால் இல்லை; ஓட்டம் உண்டு, மூச்சு இல்லை; காற்று உண்டு. அது என்ன?180பந்து
181பிறக்கும் போது வால் உண்டு;இறக்கும் போது வால் இல்லை. அது என்ன?181தவளை
182இலையுண்டு; கிளையில்லை,பூ உண்டு; மணமில்லை,காய் உண்டு; விதையில்லை,பட்டை உண்டு, கட்டை இல்லை,கன்று உண்டு; பசு இல்லை அது என்ன?182வாழை
183அதட்டுவான்; அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான். அவன் யார்?183நாக்கு
184விடிந்தவுடனே வேலையில் இறங்குவான்; வேலை இல்லையேல் மூலையில் கிடப்பான். அவன் யார்?184விளக்குமாறு
185தான் இருந்தால் பிறரை இருக்கவிட மாட்டான். அவன் யார்?185ஓட்டை
186தன் மேனி முழுதும் கண்ணுடையாள்; தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள். அவள் யார்?186மீன் வலை
187வீட்டிலே இருக்கிற அண்டாவுக்கு காதும் இல்லை: மூடியும் இல்லை. அது என்ன ?187கிணறு
188முதலெழுத்தில் கவிதை முதலிரண்டால் உலகம் மொத்தத்தின் இடை மெலிந்தாலும் முதலும் கடைசியும் சேர்ந்தாலும் தையல், கண்ணிலும் உண்டு188பார்வை
189வாலும் தலையும் ஒன்று உடல் ரங்கூனில் உண்டு ஸ்ரீ ரங்கத்திலும் உண்டு ஆனால் தில்லையில் இல்லை குத்தூசியில் தலை உண்டு மத்தியில் இல்லை மொத்தத்தில் மாதம் தவிர்த்தக் கவிதை இது என்ன?189குரங்கு
190இதற்கு கையுண்டு பெயரிலும் கையுண்டு மொத்தத்தில் சூரியத்தலை சேர்த்த பெண்கள் உடை190இரவிக்கை
191முதலெழுத்து தமிழின் அடுத்த எழுத்து கடை மூன்று சேர்ந்தால் ஒரு எண்ணிக்கை மொத்தத்தில் இது வருமுன் எச்சரிக்கைத் தேவை191ஆபத்து
192முதலிரண்டில் காட்சி, முதல் மூன்றால் பெயர் விளித்தல் கடை இரண்டில் தலையெழுத்து மாறிய சோதிடம் மொத்தத்தில் பிரதிபலிக்கும்192கண்ணாடி
193முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?193கண்மணி
194முதல் இரண்டு பொது இடங்களில் தடை. இரண்டு யாவர்க்கும் இரண்டு. இரண்டு நீங்கின் சற்றே ஓசை மாறிய மொருமொரு தின்பண்டம். சிறுவர்களுக்கு மிக பிடிக்கும். மொத்தத்தில் நினைவுகளாய் இருக்கும் இது என்ன?194புகைப்படம்
195முதலோடு கடை சேர்ந்தால் மேல் பகுதி. முதலோடு மூன்றை சேர்த்தால் செல்வம். இச்செல்வம் கொண்டு கடை மூன்றை ஓட்டவும் செய்யலாம்.195மாட்டு வண்டி
196முதலோடு நான்கும் மூன்றும் சேரின் நாவில் எச்சில் ஊறும் பிஞ்சு காய். மொத்தத்தில் இது இல்லாத கிராமம் இல்லை. அது என்ன?196மாட்டு வண்டி
197ஐந்தில் நான்காவது நீங்கின் புதியது. முதல் மூன்றோடு மதம் சேரின் மற்றுமொரு மதம். மூன்றும் நான்கும் பொருள் தராது. இரண்டும் இரட்டை கிளவியானால் தீப்பொறி பறக்கும்; எரியாது. கையிலே பிடித்தால் சுடாது. அது என்ன ?197மின்மினி பூச்சி
198வெள்ளைக் கத்திரிக்காய், கள்ளக் கூச்சல் போடுது அது என்ன ?198சங்கு
199கொதிக்கும் கிணற்றில் குதிப்பானாம்; கூச்சல் இல்லாமல் குளிப்பானாம். அவன் யார்?199அகப்பை அல்லது கரண்டி
200கத்திபோல் இலை இருக்கும் கவரிமான் பூப்பூக்கும்; தின்னப்பழம் பழுக்கும், தின்னாத காய் காய்க்கும். அது என்ன?200வேப்பமரம்
201செக்கச் சிவந்திருப்பாள்; செவ்வாழை போல் இருப்பாள்; வாலும் முளைத்திருப்பாள்; வந்திருப்பாள் சந்தையிலே. அவள் யார்?201மிளகாய்
202பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது அது என்ன?202கண்கள்
203அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி. பாதிநாள் குறைவாள்; பாதிநாள் வளர்வாள். அது என்ன?203நிலா
204ஆலமரம் தூங்க; அவனியெல்லாம் தூங்க; சீரங்கம் தூங்க; திருப்பாற்கடல் தூங்க; ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?204மூச்சு
205ஒல்லியான மனிதன்; ஒரே காது மனிதன்; அவன் காது போனால்; ஏது பயன்? அவன் யார்?205தையல் ஊசி
206முதலின்றி அழகி, நடுவின்றி அரை, கடையின்றி வெறுஞ்சொல், கவிதை சொன்ன இவர் யார்?206பாரதி
207முதலின்றி போதை, நடுவின்றி வெடிக்கும், கடையின்றி வெறுஞ்சொல், மொத்தமான இந்தச்சுமை என்ன?207பாரம்
208முதலிழந்தால் ஓடும், முதலிரண்டு இன்றி தீம்புகை, இரண்டோடு கடை சேரின் போதையாம், நான்கில் நளினம் காட்டும் இது என்ன?208பரதம்
209நடுவழிய ஓய்வுக்காம், கடையிரண்டில் ஏதுமில்லை சொல், மூன்றெழுத்தில் உடுத்தலாம், மொத்தத்தில் பெண்கள் விருப்பம், அது என்ன?209பட்டு
210கடை மூன்றில் தண்நிழலும், கடையிரண்டால் போதை வரும், முதலிரண்டு ஓய்விற்க்காகும், முதலோடு கடை சேரின் வெடிக்கும், முதலோடு கடையிரண்டு சுமையாம், மொத்தமாய் என்னவென்று சொல்லுங்க?210பாய்மரம்
211கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம், தெரிந்தவர் சொல்லுங்கள் இங்கே?211பழனி
212மொத்தத்தில் இரண்டு வார்த்தை, மொத்தமாய் அழகணி முதலெழுத்தோடு கடை சேர வல்லின மார்கழிக்குளுமை முதலும் நான்கைந்தும் இருகைகளில்212பணி(பனி)
213கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள் காஞ்சியில். நான் யார்?213பட்டுத்துணி
214முதலும் கடையும் சேர்ந்தால் விநாயக விருப்பம், முதலோடு கடையிரண்டு சேர்ந்தால் ஓசை மாறிய பெருங்காற்று, முதலோடு மூன்று சேர அறுசுவைக்குள் ஒன்று, இரண்டு வார்த்தையாக்கினால், முதல் வார்த்தையில் முக்கியமானவர், இரண்டாம் வார்த்தை பாம்பெதிரி, மொத்தத்தில் அழகுப் பறவை, நான் யார்?214புள்ளிமயில்
215முதலோடு கடை சேரினும், அன்றில் கடையிரண்டும், குன்றின் அடுத்த வடிவம், முதல் நான்கின் கடையில் புள்ளியிழந்த நிலவகை, நடுவோடு கடை சேர கழுத்துக்கு மேல் போகும், மொத்தத்தில் முருகனிடம் சரணடைவோம்!215மருதமலை
216கடையிரண்டால் குழந்தை வெறுப்பு, சிலதை திங்கலாம், முதலிரண்டு ஓசை மாறிய திருவிழா, மொத்தமாய் புரியாமல் இருக்கும் நான்யார்?216விளங்காய்
217முதலோடுகடை சேர்ந்தால் "தா", கடை இரண்டால் ஏற்றம், நடுவிலே பலவும் திணிக்கலாம், மொத்தத்தில் கோழிக்கு பிடித்த இடம், அது என்ன?217குப்பைமேடு
218இது வந்தால் பேச்சுக் குறையும், முதலிரண்டின் தூய்மை முக்கியம், கடையிரண்டால் அழுகை வரும், முதலும் கடையும் சேர்ந்தால் ஆடு கோழிக்கு ஆபத்து முதலெழுத்தில் கால் சேர்த்து அடுத்ததோடு சேர்த்தால் தேநீர்க்கு உதவும், அது என்ன?218பல்வலி
219பறிக்கப் பறிக்க பெரிதாகும்! - அது என்ன?219குழி
220ஒரு கிணற்றில் ஓரே தவளை! - அது என்ன?220நாக்கு
221ஒன்பது பிள்ளைக்கு ஒரே ஒரு குடுமி அது என்ன?221பூண்டு
222கொத்தரோ,தச்சரோ,கட்டாத கோபுரம் சின்னதாய் இருக்கும் சித்திரக்கோபுரம் அது என்ன?222கறையான் புற்று
223அள்ள முடியும்; ஆனால் கிள்ள முடியாது - அது என்ன?223தண்ணீர்
224அள்ளவும் முடியாது; கிள்ளவும் முடியாது - அது என்ன?224காற்று
225ஏழை படுக்கும் பாய்; எடுத்துச் சுருட்ட ஆள் இல்லை? - அது என்ன?225
226பொழுது சாய்ந்தால் பூந்தோட்டம்; விடிந்து பார்த்தால் வெறுந் தோட்டம்... - அது என்ன?226நட்சத்திரங்கள் / வானம்
227தாளைக் கொடுத்தால் தின்னும்; தண்ணீர் குடித்தால் மடியும். - அது என்ன?227நெருப்பு
228பக்கத்திலுள்ள பட்டணத்தைப் பார்க்க முடியவில்லை. - அது என்ன?228முதுகு
229நூல் நூற்கும்; இராட்டை அல்ல, வலை பின்னும்; தறியும் அல்ல - அது எது?229சிலந்தி
230வட்டக் குளத்திலே மீன் வந்து மேயுது; ஈட்டியாலே குத்தி எடுத்து வாயில் போடு! - அது என்ன?230வடை
231காட்டுக்குப் போனேன்; இரண்டு விறகு கொண்டு வந்தேன்; பகலிலே ஒன்று, இரவிலே ஒன்று எரித்தேன். - அது என்ன?231சூரியன் சந்திரன்
232மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும். - அது என்ன?232இரயில்
233சுருக்கென்று குத்தும் முள்; பொறுக்க முடியாது - அது என்ன?233தேள்
234மாவிலே பழுத்த பழம்; மக்கள் விரும்பும் பழம். அது என்ன?234அப்பளம்
235குண்டோதரன் வயிற்றிலே, குள்ளன் நுழைகிறான். - அவன் யார்?235பூட்டும் சாவியும்
236கண் சிமிட்டும் ஒன்று; மணி அடிக்கும் மற்றொன்று; கண்ணீர் வடிக்கும் இன்னொன்று. - அது என்ன?236மின்னல், இடி, மழை
237பார்த்ததோ இரண்டு பேர், எடுத்ததோ பத்துப் பேர், ருசி பார்த்ததோ ஒருத்தன். - அவன் யார்?237கண்கள், கைவிரல்கள். நாக்கு
238காகிதத்தை கண்டால் கண்ணீர் விடுவாள்; முக்காடு போட்டால் சொக்காயில் தொங்குவாள். - அவள் யார்?238பேனா
239மூட்டை தூக்கி முத்தையன் நத்தையல்ல; தண்ணீரில் இருக்கும் தத்தையன் தவளையல்ல. - அவன் யார்?239ஆமை
240சுருங்கினால் எனக்கு அவன் அடக்கம்; விரிந்தால் நான் அவனுக்கு அடக்கம். - அவன் யார்?240குடை
241கால் உண்டு; நடக்க மாட்டான். முதுகு உண்டு; வளைக்க மாட்டான். கை உண்டு; மடக்க மாட்டான். - அவன் யார்?241நாற்காலி
242இதயம் போல் துடிப்பிருக்கும்; இரவு பகல் விழித்திருக்கும். - அது என்ன?242கடிகாரம்
243கன்னங்கரிய அரங்கத்தில் வெள்ளைப்பந்து விளையாடும். - அது என்ன?243கரும்பலகையும் சாக்பிஸ்ஸும்
244எத்தனை தடவை திறந்து முடினாலும் சின்னச் சத்தம் கூட தராத கதவுகள். - அது என்ன?244கண்
245கையில்லாமல் நீந்துவான்; கால் இல்லாமல் ஓடுவான். - அவன் யார்?245படகு, கப்பல்
246ஓகோ மரத்திலே, உச்சாணிக் கிளையிலே, ஓட்டுச் சட்டியிலே களிமண் இருக்கிறது. - அது என்ன?246விளாம்பழம்
247ஒரு ஊருக்கு ஐந்து வழி - அது என்ன?247உள்ளங்கை
248காட்டுக்குள்ளே நெல் விதைத்தேன்; காக்காய்ம் தின்னவில்லை; குருவியும் தின்னவில்லை - அது என்ன?248உப்பு
249இத்தனூண்டு சித்தாளுக்கு, ஏழு சுற்றுக் கண்டாங்கி - அது யார்?249வெங்காயம்
250உப்பை உண்டவன் உறங்காமல் அலைகிறான் - அவன் யார்?250கடல்
251நூல் இல்லை; ஊசி உண்டு; வாயில்லை; பாட்டுப்பாடும் - அது என்ன?251கிராமபோன்
252மரத்திற்கு மரம் தாவுவான்; குரங்கு அல்ல. பட்டை அடித்திருப்பான்; சாமியாரல்லன். - அவன் யார்?252அணில்
253பார்ப்பதற்கு ஐந்து கால்; எண்ணுவதற்கு நான்கு கால் - அது யார்?253யானை
254முத்து முத்துத் தோரணம்; தரையில் விழுந்து ஓடுது - அது என்ன?254மழை
255கழுத்துண்டு; கையில்லை. நாக்குண்டு; பேச்சில்லை. வாயுண்டு; அசைவில்லை. தொப்பியுண்டு; தலைமயிர் இல்லை. - அது என்ன?255மை விட்டு எழுதும் பேனா
256அப்பன் சொறியன்; ஆத்தாள் சடைச்சி; அண்ணன் முழியன்; நானோ சக்கரைக்கட்டி. - அது என்ன?256பலாப் பழம்
257கோயிலுக்குப் போனேன்; கும்பிடு போட்டேன். பூவில்லாத இலையைப் போற்றி வைத்தேன். பழுக்காத காயைப் பணிந்து வைத்தேன். விதையில்லாக் கணியை வேண்டி வைத்தேன் - அவர்கள் யார்?257வெற்றிலை, தேங்காய், வாழைப்பழம்
258நெற்றியிலே கண்ணுடையான் கருப்பண்ணன். நெருப்பைத் திண்பான்; நீரும் குடிப்பான் - அவன் யார்?258இரயில்
259ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர் - அது என்ன?259கண்ணீர்
260ஆயிரம் குழந்தைகட்டு, அரைஞாண் ஒன்று - அது என்ன?260துடைப்பம்
261பாத்தி சிறு பாத்தி; பாய்வது கரு நீர்; வேரோ வெள்ளை வேர்; பூவோ செம்பூ - அது என்ன?261விளக்கு
262வளைக்க முடியும்; ஒடிக்க முடியாது - அது என்ன?262தலைமுடி
263கறுப்புப் பாறையில் வெள்ளைப் பிறை - அது என்ன?263யானை
264வெள்ளை மாடு; வாலால் குடிக்குது - அது என்ன?264விளக்குத்திரி
265உதைத்தாலும் அடித்தாலும், ஒன்றாக இருக்கும் - அது என்ன?265தண்ணீர்
266பச்சைப் பெட்டியில் பத்துச் சரம்; எடுத்துப் பார்க்கலாம் - ஆனால் தொடுத்துப் போட முடியாது - அது என்ன?266வெண்டைக்காய்
267நாலு மூலைச் சதுரப் பெட்டி - அதன் மேலே ஒடுமாம் குதிரைக் குட்டி! அது என்ன?267அம்மியும் அரைக்கும் கல்லும்/குழவியும்
268நாலு உலக்கை குத்திவர, இரண்டு முறம் புடைத்து வர, துடுப்புத் துளாவி வர, துரை மக்கள் ஏறிவர. - அது என்ன?268யானை
269இந்தப் பிள்ளை பெரியவனானால், படிக்காமலே பலன் தருவான்! - அவன் யார்?269தென்னம்பிள்ளை
270உயிர் இல்லாப் பறவை; உலகைச் சுற்றி வருது! - அது என்ன?270ஆகாய விமானம்
271இருந்தாலும், பறந்தாலும், இறந்தாலும் இறக்கை மடக்காத பறவை - அது என்ன பறவை?271தட்டான் பூச்சி
272நீலக்கடலிலே பஞ்சு மிதக்குது. - அது என்ன?272நீல வானின் மேகம்
273எட்டாத தூரத்தில் தொட்டில் கட்டி ஆடுது! - அது என்ன?273தூக்கணாங்குருவிக்கூடு
274ஒரு அகப்பை மாவாலே, ஊரெல்லாம் கல்யாணம்! - அது என்ன?274
275ஆழக் குழி தோண்டி, அதில் ஒரு முட்டையிட்டு, அண்ணாந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை. - அது என்ன?275தென்னை மரம்
276கட கடா குடு குடு; நடுவிலே பள்ளம். - அது என்ன?276ஆட்டுக்கல்
277இட்டேன்; எடுக்க முடியவில்லை. பூசினேன்; பிடமுடியவில்லை. - அது என்ன?277கோலம்
278காய்த்த மரத்திலே கல் எடுத்துப் போட்டால், காவல்காரப் பையன் கோபப்பட்டு வருவான். - அவன் யார்?278தேனீ
279நாலு மூலை நாடகசாலை; நடுவிலிருக்கும் பாடகசாலை; ஆடும் பெண்கள் பதினாறு; ஆட்டி வைப்பவர் இரண்டுபேர். - அது என்ன?279தாயம் விளையாட்டு
280பிறக்கும் போது சுருண்டிருப்பாள்; பிறந்த பின்னர் விரிந்திருப்பாள். - அவள் யார்?280வாழையிலை
281குட்டி போடும்; ஆனால் எட்டப் பறக்கும் - அது என்ன?281வெளவால்
282தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் தொட்டால் போது; ஒட்டிக் கொள்வான். - அவன் யார்?282சிலந்தி வலை
283ஓடிப் படர்வேன்; கொடியல்ல. ஒளிமிக உண்டு; நிலவல்ல. மனைகளை அலங்கரிப்பேன்; மலரும் அல்ல. - அது என்ன?283மின்சாரம்
284செடியில் விளையாத பஞ்சு; தறியில் நூற்காத நூல்; கையில் தொடாத துணி! - அது என்ன?284ஒட்டடை
285உச்சியில் குடுமி உண்டு; மனிதனல்லன், உடம்பெல்லாம் உரோமமுண்டு; குரங்குமல்லன், உருண்டை விழி மூன்றுண்டு; சிவனுமல்லன் - அவன் யார்?285தேங்காய்
286காலும் இல்லை; கையும் இல்லை; காடும் மலையும் நெடுகச் செல்வான். அவன் யார்?286பாதை
287இரவல் கிடைக்காது; இரவில் கிடைக்கும். - அது என்ன?287தூக்கம்
288வெள்ளை வயலிலே கறுப்புவிதை. கண்ணால் பார்த்தேன்; கையால் எடுக்க முடியவில்லை! - அது என்ன?288புத்தகம்
289நெருப்பிலே சுட்ட மனிதனுக்கு நீண்ட நாள் வாழ்வு. - அது யாரு?289செங்கல்
290பச்சை பாம்பு கல்லைத் தூக்குது! - இது என்ன?290புடலங்காய்
291மொட்டைத் தாத்தாத் தலையிலே இரட்டைப் பிளவு! - அது யாரு?291பட்டாணி
292எங்கள் ஆயாள் வீட்டுத் தோட்டத்திலே பத்து வாழை மரங்கள் - அவைகளை ஆட்டினாலும் ஆட்டலாம்; பிடுங்க முடியாது. - அவை என்ன?29210 விரல்கள்
293இந்த ஊரிலே அடிபட்டவன்; அடுத்த ஊரிலே போய்ச் சொல்கிறான். - அவன் யார்?293தபால்
294இரவும் பகலும் ஓய்வில்லை; அவன் படுத்தால் எழுப்ப ஆள் இல்லை. - அவன் யார்?294இதயம்
295அண்ணன் மத்தளம் கொட்ட, தங்கை விளக்குக் காட்ட, அம்மா தண்ணீர் தெளிக்கிறாள் - அவர்கள் யார்?295இடி , மின்னல் ,மழை
296அம்மான் வீட்டுத் தோட்டத்திலே, பட்டாக்கத்தி தொங்குது. - அது என்ன?296அவரைக்காய்
297கிண்ணம் போல் - பூ பூக்கும் கிள்ளி முடிக்க முடியாது... - அது என்ன பூ?297ஊமத்தம் பூ
298ஒற்றைக்கால் கறுப்பனுக்கு எட்டுக் கை! - அது என்ன?298குடை
299இதயம் போல் துடிப்பிருக்கும்; இரவு பகல் விழித்திருக்கும்! - அது என்ன?299குடை
300அடர்ந்த காட்டின் நடுவிலே ஒரு பாதை.... - அது என்ன?300கடிகாரம்
301ஆற்று மணலை அள்ளித் தின்போம்; நாங்கள் ஒரு சாதி. வெள்ளைக் கல்லை உடைத்துத் தின்போம்; நாங்கள் ஒரு சாதி. ஓணானை போல் உரித்துத் தின்போம்;301தலையில் முடிகளிடையே உச்சி வகிடு எடுப்பது
302நாங்கள் ஒரு சாதி - இவுங்க யாரு?302சர்க்கரை, கற்கண்டு, வாழைப்பழம்
303எட்டுக்கால் ஊன்றி; இருகால் படமெடுத்து; வட்டக் குடை பிடித்து வருகிறார் துரை மகனார்........ - இவர் யார்?303நண்டு
304விரிந்த ஏரியிலே வெள்ளோட்டம் மிதக்குது! - அது என்ன?304நிலா
305பகலில் துயிலுவான்; இரவில் அலறுவான்......... அவன் யார்?305ஆந்தை
306மஞ்சள் குருவி நெஞ்சைப் பிளந்து மகாதேவனுக்கு பூசை ஆகுது! - அது என்ன?306வாழைப்பழம்
307பள்ளிக்கூடம் போகிற பாப்பாவுக்குக் கையிலே ஒரு டை; தலையிலே ஒரு டை. - அது என்ன?307குடை, சடை
308பரட்டைத்தலை மாமியாருக்குப் பவளம் போல் மருமகள்! - அவள் யார்?308அத்திப்பழம்
309வெள்ளைக் கொல்லை; கறுப்பு விதை. கை விதைக்கும்; வாய் கொறிக்கும். - அது என்ன?309கரும்பலகை
310அமைதியான பையன்; அடிக்காமல் அழுவான். அவன் யார்?310அலாரம்
311இலை இல்லை; பூ இல்லை; கொடி உண்டு. அது என்ன?311துணி போடும் கொடி
312அதிவேகக் குதிரை, ஆடியபடி செ‌ல்லு‌ம் கு‌திரை போ‌ட்ட கோ‌ட்டை‌த் தா‌ண்டாம‌ல் ஓடு‌ம் அது என்ன?312இரயில் வண்டி
313எங்வக அ‌‌ம்மா போ‌ட்ட ‌சி‌க்கலை யாராலு‌ம் ‌பி‌ரி‌க்க முடியாது அது என்ன?313சடை பின்னல் அல்லது இடியப்பம்
314ஒரே வ‌யி‌ற்‌றி‌ல் வா‌ழ்‌ந்தாலு‌ம் ஒரு பிள்ளை ஓடுவான், மற்றவன் நடப்பான். அது என்யன?314கடிகார முள்
315உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி. அது என்ன?315சாலை
316இவ‌ன் வலை ‌பி‌ன்‌னுவா‌ன் ஆனா‌ல் மீ‌ன் ‌பிடி‌க்க மா‌ட்டா‌ன் அவ‌ன் யார்?316சிலந்தி

நன்றி : தாமரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக