திங்கள், 23 நவம்பர், 2015

பொன்மொழிகள் - தொகுப்பு 01

மனிதர்களை நீ எடை போட்டுக் கொண்டே இருந்தால் அவர்களை நேசிக்க உனக்கு நேரமே கிடைக்காது.

வயதாவதைக் கண்டு பயப்படாதீர்கள்.பலருக்கு அந்த வாய்ப்பே கிடைப்பதில்லை.
உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையனாகிறான்.
சட்டென்று பதில் உரைப்பவனுக்கு அறிவு மட்டம்.
ஏளனம் என்பது குறுகிய உள்ளத்திலிருந்து வரும் நச்சுப் புகை.
அகங்காரம் வரும் போது அவமானமும் கூடவே வரும்.திடீரென்று நீ வெற்றி பெற்று விட்டால்,நீ வெற்றி
பெறுவதற்காகவே பிறந்தவன் என்று எண்ணி விடாதே.

சோம்பேறித்தனம் தற்கொலைக்கு சமம்.நம்மைப் பற்றிக் கேவலமாகப் பேசுபவர்களுக்கும் எழுதுபவர்களுக்கும்
சரியான பதில் என்ன தெரியுமாமௌனம் .கடலில் எவ்வளவு புயல்களைச் சந்தித்தீர்கள் என்பதைப் பற்றி
உலகிற்கு அக்கறையில்லை.கப்பலைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா
என்பதில் தான் அக்கறை.

பேசாத வார்த்தைக்கு நீ எஜமான்.பேசிய வார்த்தை உனக்கு எஜமான்.வாக்குறுதி என்பது ஒரு வகையில் கடனே.பகிர்ந்த துன்பம் பாதியாகிறது.பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது.செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்.செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.கோபம் என்பது ஒரு குட்டிப் பைத்தியம்.வணங்க ஆரம்பிக்கும் போது வளர ஆரம்பிக்கிறோம்.தவறு கூடு தலாய் இருந்தால் பிடிவாதமும் கூடுதலாய் இருக்கும்.உங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகம் பேசுகிறீர்களோ
அவ்வளவு அதிகம் பொய் சொல்ல நேரிடும்.நண்பன் என்பவன் உங்கள் குறைகளை எல்லாம் அறிந்தும்
உங்களை விரும்புபவன்.ஒரு காரியம் சிரமமானது என்று பயப்படுகிறோம்.உண்மையில் நாம் பயப்படுவதால் தான் அது சிரமமாகிறது.

பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை.
முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்று இல்லை.
கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்று இல்லை.
அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை.
சமய சந்தர்ப்பம் தெரியாமல் பிருகஸ்பதியே பேசினாலும் அவன் வெகுமதி பெறாமல் போவது மட்டும் அல்லாமல் வெறுப்பையும் தேடிக் கொள்கிறான்.
குதிரை,ஆயுதம்,வீணை,சொல்,புத்தகம்,ஆண்,பெண் இவை அனைத்தும் பயன்படுவதும்,பயன்படாமல் போவதும் உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து உள்ளது.
பிரம்மாவே பயமுறுத்தினாலும் தைரியசாலி தைரியத்தைக் கைவிடுவதில்லை.கோடை கால வெயில் குட்டையைததான் வற்றச் செய்யும்.சிந்து நதியோ,எப்போதும் பெருகி ஓடிக் கொண்டேயிருக்கும்.
நெருக்கடி இல்லாத சாதாரண காலத்தில் எல்லோரும் அறிவாளிகளாக இருக்க முடியும்.
செல்வம் சேர்ந்தவனிடம் அகம்பாவம் சேரும்.உணர்ச்சி வசப்படுபவன் ஆபத்தில் சிக்கிக் கொள்வான்.
அரசனின் அருகில் இருந்து ஊழியம் செய்பவன்,நல்ல குடும்பத்தில் பிறக்காதவனாகவோ,மூடனாகவோ,கருணை இல்லாதவனாகவோ இருந்தாலும் அவனை எல்லோரும் மதிக்கிறார்கள்.
பணத்தைசெர்ப்பதிலும் துன்பம்;சேர்த்த பணத்தைக் காப்பதிலும் துன்பம்;அதை இழந்து விட்டாலும் துன்பம்;செலவிட்டு விட்டாலும் துன்பம்.எப்போது பார்த்தாலும் பணத்தால் துன்பமே உண்டாகிறது.
                                                           --
பஞ்ச தந்திரக் கதைகள் நூலிலிருந்து
அறிவாளிகளுக்கு அறிவு தான் அதிகம்.
முட்டாள்களுக்குத்தான் அனுபவம் அதிகம்.
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.
அறிஞர்கள் அகப்பட்டால் விட மாட்டார்கள்.
திருடர்கள் விட்டால் அகப்பட மாட்டார்கள்.
மனிதர்கள் பெரும் வெற்றிக்கு அவர்களே காரணம்.
தோல்விக்குத்தான் கடவுள் காரணம்.
இல்லை என்றால் அவர்களா தோல்வி அடைவார்கள்?சாதாரண மனிதன் புகழ் பெறத் துவங்கும்போது ,அவன் செய்த தவறுகளும் புகழ் பெறத் தொடங்குகின்றன.
காமம் என்பது எப்போது ஆரம்பமானது?நிர்வாணமாக இருந்த மனிதன் ஆடை கட்டத் துவங்கியபோது.
கஷ்டமான நேரத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் மரியாதை வருகிறது.
வழி தெரியாத நேரத்தில் ஒவ்வொரு யோசனையும் நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.
நீண்ட நாள் சிறையில் இருப்பவனுக்குக் கிழவி கூட அழகாகத் தெரிகிறாள்.
பல நாள் சாப்பிடாதவனுக்குக் கோதுமைக் கஞ்சியே அல்வா ஆகிறது.
கிடைக்கக் கூடாதவனுக்கு சிறிய பதவி கிடைத்தாலும் அவனே தெய்வமாகிவிட்டதாகக் கனவு காண்கிறான்.
கையெழுத்துப் போடாத செக்கில் எத்தனை ஆயிரம் ரூபாயை வேண்டுமானாலும் எழுதலாம்.செய்யப்போவதில்லை என்று முடிவு கட்டி விட்டால் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் சொல்லலாம்.
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு என்ன வேண்டும்?எந்த விமரிசனத்தையும் தூக்கி எறிய வேண்டும்.
சோழன் காலத்தில் யாரும் மின்சாரத்தைப் பற்றிப் பேசவில்லை.ஆகவே,மின்சார யுகத்தில் சோழனைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமென்ன?

புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி.
கருமியின் நெஞ்சம் சாத்தானின் இருப்பிடம் .
நோய் வரும்வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டிவரும்.
அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.
நன்றி மறத்தலில் எல்லா கெட்ட குணங்களும் அடங்கும்.
எப்படி வேண்டுமானாலும் சமையல் செய்யுங்கள்.
ஆனால் அன்புடன் பரிமாறுங்கள்.
நம் சிரிப்பு அடுத்தவனுக்கு கண்ணீரை வரவழைக்கிறது என்றால்
நாமே நம் பற்களைத் தட்டிக் கொள்ள வேண்டும்.
பெரிய பாறை மீது யாரும் மோதிக் கொள்வதில்லை
சிறிய கற்கள் தான் இடற வைக்கின்றன.
வீடுகளைக் கட்டுபவர்கள் ஆண்கள்.-அதை
வீடாக வைத்திருப்பவர்கள் பெண்கள்.
நம் வாழ்நாள் மிகவும் குறைவு என்று வருந்துகிறோம்.
ஆனால் நம் வாழ்விற்கு முடிவே இல்லாததுபோலக்
காரியங்களை செய்து கொண்டே இருக்கிறோம்.
கவலைப்பட நேரமின்றி உழை
கண்ணீர்விட நேரமின்றி உறங்கு.
நீயே அதிர்ஷ்டக்காரன்.
மகிழ்ச்சி என்பது நம் வீட்டில் விளைவது.
மற்றவர் தோட்டத்தில் அதை தேட வேண்டியதில்லை.
நீ தொலைத்தது நாட்களைத்தான்.
நம்பிக்கையை அல்ல.
தவறான வழிதான் எப்போதும் பொருத்தமான வழியைப் போன்ற தோற்றம் அளிக்கிறது.
நம்முடைய சந்தேகங்கள் நமக்கு துரோகிகள்.
நாம் வெற்றி பெற முடியாதபடி நம்மை பயமுறுத்தி தடுத்து விடுகின்றன.
ஒரு புத்திசாலியால் சாதிக்க முடியாததை
ஒரு பொறுமைசாலி சாதித்து விடுவான்.

மக்கள் ஒரு அற்பனைச் சமாளிப்பதற்குப் பெயர் சர்வாதிகாரம்.
ஒவ்வொரு அற்பனையும் சமாளிப்பதற்குப் பெயர் ஜனநாயகம்.
கெட்ட பழக்கம் முதலில் யாத்ரிகனைப்போல வரும்.
பிறகு விருந்தாளியாகி,இறுதியில் அதுவே முதலாளி ஆகிவிடும்.
முள்,கரண்டி,கத்தி ஆகியவற்றின் துணை கொண்டு உண்பது,மொழி பெயர்ப்பாளரை துணைக்கு வைத்துக் கொண்டு காதலிப்பதற்கு ஒப்பாகும்.
எந்தப் பொருளையும் மலிவாக வாங்கக் கூடிய நேரம் போன வருடம்.
இருக்கிற செல்வம் போதுமென்று திருப்தி அடைவது சரிதான்.
ஆனால் இருக்கிற திறமை போதுமென்று நினைப்பது சரியல்ல.

உங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு எப்போதும் கொஞ்சம் பசியும் குளிரும் இருக்கும்படி செய்யுங்கள்.
இன்றைய என் பசிக்கு உணவு அளிக்காது பிறகு சொர்க்கத்தைக் கொடுக்கும் இறைவன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
மிதவாதி என்பவன் யார்?உட்கார்ந்து யோசிப்பவன்.என்ன,உட்காருவது கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
உடனடியாகச் சீர்திருத்த வேண்டியது எது?அடுத்த வீட்டுக்காரனின் குணம்.
சீட்டுக்கட்டை சரியாகக் கலைக்கவில்லை என்று சொல்லிக் கொண்டிருப்போம்,நம் கைக்கு நல்ல சீட்டு கிடைக்கும் வரை.
நீ சொல்வது சரிதான் என்று ஒருவர் என்னிடம் சொன்னால் உடனே அது சரியில்லையோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகிறது.
ஒரு ஆளையோ,ஒரு தேசத்தையோ,ஒரு கொள்கையையோ வெறுக்க வேண்டும்.அதில்தான் ரொம்பப்பெருக்கு சந்தோசம்.

செப்பு மொழி
சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது.
பல நேரங்களில் வெற்றியே புத்தி ஆகி விடுகிறது.
சாதாரண மனிதன் புகழ் பெறும்போது
அவன் செய்த தவறுகளும் புகழ் பெறுகின்றன.
வெற்றியில் நிதானம் போகிறது.
அதைத் தொடர்ந்து வெற்றியும் போகிறது.
எப்போதும் ஒரே நிலையில் இருப்பதற்குப் பெயர்தான் நிம்மதி.
கேட்டால் சிரிப்பு வர வேண்டும்.
சிரித்தால் அழுகை வர வேண்டும்.
அதுதான் நல்ல நகைச்சுவை.
வாழ வேண்டும் என்று நினைக்கிறவனுக்கு
எந்த விமரிசனத்தையும்
தூக்கி எறியும் தைரியம் வர வேண்டும்.
எந்த வேலை உனக்குப் பழக்கமானதோ,அந்த வேளையில் புதுமைகள் செய்யத் தவறாதே.

, --
கண்ணதாசன்


கடைசி வார்த்தை தன்னுடையதாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருவர் மோதிக் கொள்ளும் விஷயம் தான் வாக்குவாதம்.
முன்னேற வேண்டும் என்று விரும்பினால் யாருடனும் சண்டை போடாதீர்கள்.அதில் நேரம் வீணாகிறது.நாயிடம் கடிபடுவதைக் காட்டிலும் நாய்க்கு வழி விடுவதே மேல்.
மனிதனின் உண்மையான நண்பர்கள் மூன்று பேர்கள்தான்.அவர்கள்,
*வயதான மனைவி
*
வளர்த்த நன்றியுள்ள நாய்
*
தயாராய் உள்ள ரொக்கப்பணம்.
இனாமாக நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.
என்ன ஆச்சரியம்!எனக்குத் தெரிந்தது மிகவும் குறைவு என்பதைப் புரிந்து கொள்ள நான் எவ்வளவு விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது!


வாழ்க்கையைப் பற்றி பெரிதும் கவலைப் படாதீர்கள்.எப்படியும் நீங்கள் அதிலிருந்து தப்பப் போவதில்லை.
கவலைகள் வந்து கொண்டுதான் இருக்கும்.ஆனால் அதற்கு நாற்காலி போட்டு உட்கார வைக்கக் கூடாது.
வெற்றி பெற்றவனிடம்,அவன் கூறுவது எல்லாம் உண்மையா என்று யாரும் கேட்க மாட்டார்கள்.
விமரிசனத்தால் காப்பாற்றப்படுவதை விட புகழ்ச்சியினால் அழிந்து போவதையே பெரும்பாலோர் விரும்புகின்றனர்.
வாதாட பலருக்குத் தெரியும்.உரையாட ஒரு சிலருக்கே தெரியும்.
அதிர்ஷ்டத்தின் வலது கை உழைப்பு:இடது கை சிக்கனம்.

'
எப்படி?'என்று தெரிந்திருப்பவனுக்கு எப்போதும் வேலை கிடைத்து விடும்.
ஆனால் 'ஏன்?'என்று தெரிந்திருப்பவன் தான் அவனுக்கு முதலாளி ஆக இருப்பான்.

1 கருத்து: